படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் Youtube விமர்சகர்கள்.. கேரள திரைத்துறை எடுத்த அதிரடி முடிவு… பலன் கொடுக்குமா..?

ஒரு காலத்தில் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே பிரபலங்களாக கருதப்பட்டனர்.. ஆனால் தற்போது அப்படி இல்லை.. சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி யார் வேண்டுமானாலும், செலபிரிட்டி ஆகலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விஷயம் தான்.. இதனால் பல துறைகளிலும் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டாலும், திரைப்படத் துறையில் மட்டும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. காரணம் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன..

சோஷியல் மீடியா சோகம்..! பேசுவதை நிறுத்திய மாணவிக்கு நேர்ந்த விபரீதம்..! திடுக்கிடும் தகவல்..!

குறிப்பாக பல யூ டியூப் சேனல்கள் FDFS Public Review என்று படம் பார்த்தவர்களிடம் கருத்துகளை கேட்டு, அதை உடனக்குடன், தங்கள் சேனல்களில் பதிவேற்றுவதும் கின்றனர்.. மேலும் திரைப்பட விமர்சகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பணம் வாங்கி கொண்டு விமர்சனம் செய்வதாக கூறப்படுகிறது.. ஒரு சிலரே நேர்மையான திரைப்பட விமர்சனங்களை கூறுகின்றனர்..

டிஜிட்டல் மீடியா வருவதற்கு முன்பு வரை, ஒரு திரைப்படம் வெளியான அடுத்த நாள் தான் அந்த விமர்சனம் செய்தித்தாளில் வெளிவரும்.. சேனல்களிலும் ஓரிரு நாட்கள் கழித்தே விமர்சனம் ஒளிபரப்படும்.. ஆனால் தற்போது, சமூக வலைதளங்களில், படத்தைப் பார்த்து கொண்டிருக்கும் போதே, முதல் பாதி எப்படி உள்ளது, 2-வது பாதி எப்படி உள்ளது என்று பலரும் தங்கள் விமர்சனங்களை ட்வீட் செய்து வருகின்றனர். மேலும் திரையரங்கில் இருந்து வெளியே வந்தவுடனே படம் குறித்த தங்களது கருத்துக்களை ஆன்லைன் சேனல்களுக்கு தெரிவிக்கின்றனர். தற்போதைய இந்த போக்கு திரைத்துறைக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது…

online film critics ban

அந்த வகையில் FDFS விமர்சனம் (முதல் நாள் முதல் காட்சி) திரையரங்குகளில் ஆடியன்ஸ் ரியாக்ஷன்களை ஆன்லைன் மற்றும் யூடியூப் சேனல்கள் செய்வது நல்லதா அல்லது கெட்டதா என்ற விவாதம் கேரள திரையுலகில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. ரோஷன் ஆண்ட்ரூஸ் உட்பட பல இயக்குனர்கள் யூடியூப் விமர்சகர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.. ஒரு சில யூடியூப் விமர்சகர்கள் சில படங்களைப் பற்றி எதிர்மறையாகப் பேச பணம் வாங்குவதாகவும், அதே நேரம் படத்தை பற்றி பாசிட்டிவாக பேசவும் பணம் வாங்குவதாகவும் கூறியுள்ளார்.. மேலும் யூ டியூப் விமர்சகர்களைத் தடை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.. மலையாளத் தயாரிப்பாளர்கள் சிலரும் யூடியூப் விமர்சகர்கள் மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்..

இந்நிலையில் ஆன்லைன் ஊடகங்கள் திரையரங்குகளுக்குள் நுழைய தடை விதித்து கேரள பிலிம் சேம்பர் முடிவு எடுத்தது. இருப்பினும், யூடியூப் விமர்சகர்கள் குறித்தும், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் கேரள அரசிடம் ஆலோசனை நடத்த கேரள ஃபிலிம் சேம்பர் திட்டமிட்டுள்ளது. அதே போல் பார்வையாளர்களின் திரைப்பட விமர்சனங்களை பதிவு செய்வதற்காக ஆன்லைன் ஊடகங்கள் திரையரங்குகளுக்குள் நுழைய தடை செய்ய கேரள திரைப்பட கண்காட்சியாளர் ஒருங்கிணைப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.

untitled design 1 79 16589263784x3 1

கேரள திரைப்பட ஒருங்கிணைப்பு சங்கத்த்தின் தலைவர் (Film Exhibitors United Organisation Of Kerala) கே.விஜய்குமார் இதுகுறித்து பேசிய போது “ஒரு படம் வெளியானவுடன் பார்வையாளர்களின் கருத்தை அறிய ஆன்லைன் ஊடகங்கள் திரையரங்கு வளாகத்திற்குள் நுழைவதை நாங்கள் தடை செய்கிறோம், ஏனெனில் ஆன்லைன் ஊடகங்கள் திரைப்படங்களைப் பற்றி தவறான விமர்சனங்களை வழங்குகின்றன. குறிப்பிட்ட சிலரை குறிவைத்து வரும் விமர்சனங்கள் படத்தின் வசூலை மோசமாக பாதிக்கிறது..” என்று தெரிவித்தார்..

எனவே யூடியூப் திரைப்பட விமர்சனங்கள் தடை செய்யப்பட வேண்டுமா என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது.. ஆனால் அதே நேரம் ஒரு படத்தைப் பற்றி தனது கருத்தைக் கூறுவதற்கான உரிமையை யாராலும் பறிக்க முடியாது. எனினும் சில யூடியூப் சேனல்கள் பணத்திற்காக விமர்சனம் செய்வதே இங்கு பிரச்சனையாக உள்ளது.. காரணமே இல்லாமல் ஒரு படத்தை எதிர்மறையாக விமர்சித்து, அதன் வெற்றியை தடுப்பதை ஏற்க முடியாது என்று கேரள திரையுலகம் கூறுகிறது.

இதுபோன்ற யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலாச்சார அமைச்சகத்திடம் கேரள ஃபிலிம் சேம்பர் வலியுறுத்தி உள்ளது.. எனினும் இந்த நடவடிக்கை நேர்மறையான முடிவுகளை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்றால், மலையாள திரையுலகிற்கு மட்டும் இந்த பிரச்சனை உள்ளது என்று கூறிவிட முடியாது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களுக்கும் இதே பிரச்சனை உள்ளது.. ஆனால் மற்ற திரைப்படத் துறைகளும் கேரளத் திரைத்துறையின் இந்த முடிவை பின்பற்றுமா என்பதே மிகப்பெரிய கேள்வி..

RUPA

Next Post

வாகனங்களுக்கு தற்காலிக முன்பதிவு...! 30 நாட்களுக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும்.‌‌..! மத்திய அரசு புதிய உத்தரவு...!

Sat Feb 11 , 2023
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஜிஎஸ்ஆர் 90(இ) நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப அவர்களது நகர்தலுக்கு பொருத்தமான வகையில் மோட்டார் வாகனங்களை தேர்வு செய்து வாகனப்பதிவு செய்து கொண்டு, பின்னர் தங்களுக்கான பிரத்யேக வசதிகளை வாகனங்களில் ஏற்படுத்திக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இத்தகைய […]
car bike

You May Like