உலகளவில் யூடியூப் தளத்தின் சேவை சில மணிநேரம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை யூடியூப் தளத்தின் பயனர்கள் புதன் கிழமை இரவு எதிர்கொண்டுள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைதளம்தான் யூடியூப். 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் தினசரி அடிப்படையில் YouTube ஐ அணுகுகின்றனர். சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்கலாம்.
இத்தகைய சூழலில் புதன்கிழமை அக்டோபர் 15 இரவு உலக அளவில் யூடியூப் தளத்தின் குறிப்பிட்ட சில அம்சங்களை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்தனர். இந்த சிக்கல் சில மணிநேரம் நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டவுன்டெக்டரின் கூற்றுப்படி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு யூடியூப் சேவை முடங்கியதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பயனர்கள் வீடியோக்களைப் பார்ப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதை அறிந்திருப்பதாகவும், இந்த சிக்கலை விசாரித்து வருவதாகவும் யூடியூப் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இரவு 8:05 மணி நிலவரப்படி, அமெரிக்காவில் மட்டும் 293,240 பயனர்கள் YouTube இல் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர், டவுன்டெக்டரின் எண்கள் பயனர் சமர்ப்பித்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. பாதிக்கப்பட்ட பயனர்களின் உண்மையான எண்ணிக்கை மாறுபடலாம். இருப்பினும், இதுவரை இந்த புகாருக்கு கூகுள் பதிலளிக்கவில்லை.