வெயிலில் இருந்து தப்பிக்க என்னம்மா யோசிக்கராங்க… காருக்குள் வின்டோ ஏ.சி.யை பொருத்திய இளைஞர் …

இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இளைஞர் ஒருவர் காருக்குள் வின்டோ ஏ.சி.யை பொருத்தியது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது காரில் வீட்டுக்கு பொருத்தக்கூடிய வின்டோ ஏ.சி.யை பொருத்தி உள்ளார்.இந்த ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி வரை வெயில் வெளுத்து வாங்கியது. டாடா வெளியிட்ட புது வகையான பன்ச் காரில்தான் இந்த நபர் தனது புதிய கண்டுபிடிப்பை பொருத்தி வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளார்.

வின்டோ ஏசியின் பேட்டரி, இன்வெர்ட்டர் என அனைத்தையும் பின்பக்கத்திலேயே கச்சிதமாக பொருத்திவிட்டார். இதை சோதனை செய்து பார்த்தபோது காரில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சியைக் காட்டிலும் இந்த ஏ.சி. பிரமாதமாக வேலை செய்வதாக தனது வீடியோ பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார். இந்த வகையான கார்களில் மிகக் குறைந்த அளவு குளிர்ச்சியையே ஏசி கொடுப்பதாகவும் அதற்கு அரை மணி நேரமாவது எடுத்துக் கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் கிடைக்கும் மலிவு விலை கார்களில் பன்ச் காரும் ஒன்று. பார்ப்பதற்கு சிறிய காராக இருக்கும் இதில் 5 பேர் வரை உட்கார முடியும். ஒற்றை எஞ்சின் டர்போசார்ஜட் மற்றும் சி என் ஜி மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. மற்றபடி டூவல் ஏர் பேக், இபிடி, ஏ.பி.எஸ். பிரேக் ஸ்வே போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது . எனவே அதிக அளவில் விற்பனையாகும் லேட்டஸ்ட் காரான ’ பன்ச் ’ 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.

Next Post

பிரான்சின் ’’ரியல் ஸ்பைடர்மேன் ’’ … 48 மாடிக்கட்டித்தில் ஏறும் விநோதம்…

Sun Sep 18 , 2022
பிரான்ஸ் நாட்டில் கயிறு கூட இல்லாமல் 48 மாடிக் கட்டிடத்தை சரசர வென ஏறும் இந்த ’’ரியல் ஸ்பைடர் மேனை ’’ பார்த்து பொதுமக்கள் விநோதமாக வியக்கின்றனர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆலைன் ராபர்ட் . இவர் நேற்று தனது 60 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ’’பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் ’’ என மக்களால் அழைக்கப்படும் இவர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உலகின் மிகப் பெரிய […]

You May Like