Modi: 1 லட்சம் பேர்!… அதிரும் சேலம்!… இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!… பிரதமருடன் கைகோர்க்கும் தலைவர்கள்!

Modi: சேலத்தில் இன்று நடைபெறவுள்ள பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 16ம் தேதி பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனையொட்டி, பிரதமர் மோடி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சென்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 5 முறைக்கு மேல் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். அந்தவகையில், கோவையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட வாகனப் பேரணி நடத்த பாஜகவினர் முடிவு செய்தனர். அதன்படி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாயிபாபா கோயில் சந்திப்பில் இருந்து தொடங்கி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் அருகே நிறைவடையும் வகையில் 2.5 கி.மீ. தூரத்துக்கு வாகனப் பேரணி நடந்தது.

இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு சாலையோரங்களில் ஆங்காங்கே பாஜகவினர் ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்தியும் மலர் தூவியும் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். உற்சாக வரவேற்பை ஏற்று பிரதமர் மோடியும் கூட்டத்தினரை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கோவை ரோடு ஷோ குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள் என்றும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதற்காக பிரசார மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சோதனை முறையில் ஹெலிகாப்டர் வந்து இறங்கி சென்றது. பிரதமர் வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும், மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்ட பகுதி, அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்று டெல்லிக்கு திரும்புவதால் விமான நிலைய பகுதி ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 1 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர் என்பதால், கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையில், சேலம் சரக டிஐஜி உமா உள்ளிட்ட 4 டிஐஜிகள், சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலன் உள்பட 12 எஸ்பிக்கள், 18 கூடுதல் எஸ்பிக்கள், 32 டிஎஸ்பிக்கள் மற்றும் 60 இன்ஸ்பெக்டர்கள், 208 எஸ்ஐக்கள், 2,399 போலீசார் என ஒட்டுமொத்தமாக 2,731 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Readmore:  தமிழக மக்களே குட்நியூஸ்!… தொடர்ந்து 4 நாட்கள்!… வெப்பத்தை தணிக்க வரும் மழை!… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Kokila

Next Post

Election: பாஜகவில் PMK-விற்கு ஒதுக்க போகும் அந்த 10 தொகுதியின் உத்தேச பட்டியல்...!

Tue Mar 19 , 2024
பாஜகவில்.., பாமகவிற்கு ஒதுக்க போகும் அந்த 10 தொகுதியின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சில சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளன. மேலும், பாஜகவும் தமது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகிறது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், இரு கட்சிகளும் கூட்டணியை இறுதி […]

You May Like