Rain: தமிழக மக்களே குட்நியூஸ்!… தொடர்ந்து 4 நாட்கள்!… வெப்பத்தை தணிக்க வரும் மழை!… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Rain: தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை(மார்ச் 20) முதல் 23ம் தேதிவரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, 23ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மீனவர்களுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழகத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ள இடங்களில் நாமக்கல் மாவட்டம் கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது

Readmore: பாமக – பாஜக கூட்டணி உறுதி…! 10 தொகுதிகள் ஒதுக்கீடு…!

Kokila

Next Post

வங்கி வாடிக்கையாளர்களே!… KYC-களை புதுப்பிக்க இன்றுதான் கடைசி நாள்!

Tue Mar 19 , 2024
வங்கி வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க இன்றுடன் (மார்ச் 19) கால அவகாசம் முடிவடைகிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.. பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலும் KYC சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, மார்ச் 19 (இன்று) வரை […]

You May Like