10 பேர் பலி.. தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து..!! பெரும் சோகம்..

1557133 accident 2

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், சிந்தூரு–மாரேடுமில்லி காட் சாலையில் நள்ளிரவு நேரத்தில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.


9வது மைல்கல் பகுதியில் கூர்மையான வளைவில் திரும்பும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்புச் சுவரில் மோதியது. அதன் பின் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. விபத்து நடந்த பகுதி மலைப்பாங்கானது என்பதால் மொபைல் நெட்வொர்க் மிகவும் குறைவு. இதனால் அதிகாரிகளுக்கு விபத்து தகவல் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும், மோதுகுண்டா அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிந்தூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இடிபாடுகளில் இருந்து பல உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்ததோடு, அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். காயமடைந்த பயணிகள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: ஷாக்கிங்..!! அதிரடியாக சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு..!! வாகனங்கள், டிவிக்களின் விலை கடுமையாக உயரும் அபாயம்..!!

English Summary

10 people died.. Private bus fell into a ditch and fell into a serious accident..!!

Next Post

7 முறை எம்.பி., சபாநாயகர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்..! யார் இவர்?

Fri Dec 12 , 2025
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் வெள்ளிக்கிழமை காலை லத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரித்து வருகின்றனர்.. ஷிவ்ராஜ் பாட்டீல் அக்டோபர் 12, 1935 அன்று மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சக்கூர் கிராமத்தில் […]
shivraj patil dies 1765508674 1 1

You May Like