9 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி.. ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்..!

Taliban 1 1

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அஃப்கானிஸ்தானில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.. நேற்று நள்ளிரவில் நடைபெற்ற பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். மேலும் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்..


தாக்குதல் எந்த இடங்களில் நடந்தது?

பாகிஸ்தான் படைகள் குனர் மற்றும் பக்திகா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் விமானத் தாக்குதல் நடத்தியதாக தாலிபான் தகவல் வெளியிட்டுள்ளது. தாலிபான் அரசு பேச்சாளர் சபிஹுல்லா முஜாஹித், எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “இரவு 12 மணியளவில், பாகிஸ்தான் படைகள், கும்பல்காய் என்ற இடத்தில் உள்ள ஒரு பொதுமகனின் வீட்டை குண்டுவீசி தாக்கின. இந்த தாக்குதலில் 5 ஆண்குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். இவை அனைத்தும் கோஸ்ட் மாகாணத்தில் நடந்ததாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்

இந்த தாக்குதலுக்கு ஒரு நாள் முன்பு, பாகிஸ்தானின் பேஷாவர் நகரம் அருகே உள்ள Federal Constabulary (FC) தலைமையகத்தில் தற்கொலை குண்டு வெடிப்பு நடந்தது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் போலீஸ் தெரிவித்தது.

ஜூலை மாதம் அரசாங்கத்தால் பெடரல் கான்ஸ்டாபுலரி (FC) என மறுபெயரிடப்பட்ட சிவிலியன் துணை ராணுவப் படை, ஒரு இராணுவ கன்டோன்மென்ட்டுக்கு அருகில், நெரிசலான பகுதியில் அமைந்துள்ளது.

Read More : பெண்களுக்கு ரூ.11,000..! மோடி அரசின் இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

RUPA

Next Post

ஒரு ரூபாய் நாணயத்தை அச்சிட ஒரு ரூபாயை விட அதிகம் செலவாகும்.. அப்போ ரூ.2, ரூ.5..? - வியக்க வைக்கும் சுவாரஸ்ய தகவல்..

Tue Nov 25 , 2025
It costs more to print a one rupee coin than a rupee.. So Rs.2, Rs.5..? - Surprising and interesting information..
Coin 2025

You May Like