சூட்கேசில் மறைத்து கடத்தப்பட்ட 10 குட்டி அனகோண்டா பாம்புகள் பறிமுதல்!

பாங்காக் நகரில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் 10 அரிய வகை மஞ்சள் அனகோண்டா பாம்புகள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வழக்கம்போல் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். பேங்க்காக்கிலிருந்து விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் உடமையை ஸ்கேன் செய்த போது, அவரது பையில் ஒரு பொருள் நெலிவதை கண்டனர். உடனடியாக திறந்து பார்த்தபோது, அதில் 10 மஞ்சள் அனகோண்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அதை கடத்தி வந்தவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சுங்கத் துறை சார்பில் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெங்களூரு சுங்கத் துறையினர், பாங்காக்கில் பாம்புகளை கடத்தி வந்த பயணியை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. வனவிலங்கு கடத்தலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் வனவிலங்கு வர்த்தகம் மற்றும் கடத்தல் சட்டவிரோதமானது. கடந்த ஆண்டு, சுங்கத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஒரு பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாங்காக்கில் இருந்து குட்டி கங்காரு உள்பட 234 வன விலங்குகளை பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்தியாவில் அதிகரித்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை! ஒரே நாளில் 4.71 லட்சம் பேர் பயணம்…

Tue Apr 23 , 2024
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பேரிடர் காலத்துக்கு முன்பு விமான பயணம் மேற்கொள்பவர்களின் சராசரி எண்ணிக்கை 3,98,579 ஆக இருந்தது. இந்நிலையில், நோய் தொற்று காலத்துக்கு பின்பு மீண்டும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) இதுவரை இல்லாத அளவுக்கு உள் நாட்டு […]

You May Like