தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்..! தவெக எம்.எல்.ஏக்கள் 10 பேர் போர்க்கொடி..! விஜய்க்கு புதிய சிக்கல்..!

tvk mlas

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.. எனினும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. அக்கட்சி தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.. அவருடன் முதல் கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.. பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது..


இந்த நிலையில் தவெகவில் புதிய பூகம்பம் வெடித்துள்ளது.. கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பதவி கேட்டு 10 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.. அமைச்சர் பதவியும் இல்லை மாவட்ட செயலாளர் பதவியும் இல்லை என கேட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர்.. மாவட்ட செயலாளர்கள் தங்களை மதிக்கவில்லை எனவும் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..

மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.. புதிதாக கட்சியில் இணைந்து, தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களும் மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டு கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது..

தவெக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் தர்மபுரி, கிருஷ்னகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் இந்த 10 எம்.எல்.ஏக்களும் மாற்றுக்கட்சிகளில் இணைய தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.. குறிப்பிட்ட கட்சியிடம் இருந்து க்ரீன் சிக்னல் பெற்ற பிறகே, தற்போது தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்..

234 தொகுதிகளிலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்கலாமா என தவெக தலைமை ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் தவெக தலைமையின் இந்த யோசனைக்கு தற்போதைய மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..

Read More : Flash : தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்துள்ளது..? நகை வாங்க செம சான்ஸ்..!

RUPA

Next Post

"நாங்கள் தான் மிகவும் பிரபலமான ஜோடி": G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியிடம் ஜார்ஜியா மெலோனி சொன்ன கருத்து..! வீடியோ..!

Wed Jun 17 , 2026
‘ஜி-7’ (G7) நாடுகளின் தலைவர்கள் நேற்று பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் கூடினர். அப்போது முக்கியமான உலகளாவிய சவால்களை விவாதிக்கவும், உக்ரைனுக்குத் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான முக்கிய ஒப்பந்தத்தை வரவேற்றும் பேசினர்.. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையிலான ஒரு சிறிய உரையாடல் சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது; இதன் மூலம் ‘மெலோடி’ (Melodi) […]
modi georgia

You May Like