Flash : தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்துள்ளது..? நகை வாங்க செம சான்ஸ்..!

gold jewelery

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது..

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ள்து.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.75 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : RBI சொன்ன குட்நியூஸ்..! ஒரு கிராமுக்கு ரூ. 14,000.. தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்..!

RUPA

Next Post

'பல இந்தியர்கள் உயிரிழந்தனர்': டிரம்ப் முன்னிலையில் மாலுமிகளின் உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி கவலை..!

Wed Jun 17 , 2026
ஜி7 (G7) தலைவர்கள் கூட்டத்தில், தனக்கு அருகிலேயே அமர்ந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்திய அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை தனது கவலையை வெளிப்படுத்தினார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையால் ஏற்படும் கடுமையான மனித மற்றும் பொருளாதார இழப்புகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை […]
modi trump jpg 1

You May Like