பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.
உரங்களுக்கு டிபிடி” திட்டத்தின்கீழ், ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையங்களிலும் பயன்படுத்தப்படும் பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான் விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. மறுப்பேதும் தெரிவிக்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் (சிறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் உட்பட்) மானிய விலையில் உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
யூரியா 45 கிலோ அதிகபட்ச சில்லறை விலை ரூ242 என விவசாயிகளுக்கு சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்கப்படுகின்றது. விநியோகச் செலவுக்கும் நிகர சந்தை விலைக்கும் உள்ள வித்தியாசம் மானியமாக உர நிறுவனங்களுக்கு அரசு தருகின்றது. பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டம் 1.4.2010 முதல் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
உரத் தயாரிப்பாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் மானியத்தை அரசு நேரடிப் பலன்கள் முறை மூலம் செலுத்திவிடுகின்றது. ஏழை மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் உட்பட எந்த ஒரு ஆதார் அங்கீகார பயனாளியும் ஆதார் அடிப்படையில் உரங்களை வாங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.