நோட்..! 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

tn school 2025

பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல் பெற தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல். தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பிறந்த தேதியை திருத்துவதற்கு மேற்கண்ட ஆவணங்களுடன் பிறப்பு சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், பள்ளி சேர்க்கை நீக்க பதிவேடு ஆகியவற்றை இணைக்க வேண்டும். திருத்தம் கோரும் விண்ணப்பத்துடன் இந்த ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அதை இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால், அத்தகைய விண்ணப்பங்களை தங்கள் அலுவலக அளவிலேயே நிராகரித்து, சரியான ஆவணங்களை இணைத்து வழங்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா...? அண்ணாமலை கேள்வி

Sat Jul 26 , 2025
நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]
ma su annamalai 2025

You May Like