பெரும் சோகம்…! 50 அடி குழியில் விழுந்து பேருந்து விபத்து… 13 பேர் உயிரிழப்பு…!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் 50 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கும்ஹாரியிலிருந்து பிலாய்க்கு திரும்பிய பேருந்து செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் இறந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், பேருந்து கெடியா டிஸ்டில்லரியில் இருந்து ராய்பூர் கும்ஹாரி சாலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது கும்ஹாரி காவல் நிலையம் அருகே உள்ள சுரங்கத்தில் 50 அடிக்கு கீழே உள்ள குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து, இரண்டு கிரேன்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில்; சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் பலர் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இறந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நோட்டா உடன் போட்டி போடும் கட்சி பாஜக...! கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்...!

Thu Apr 11 , 2024
பாஜக உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசியவர்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியாக இருக்கும் இந்தியா, அமளியாக மாறிவிடும். மாநிலத்திற்கும், நாட்டுக்கும் நம்பிக்கை தரும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்தும் மோடி, திமுகவை குற்றம் சாட்டலாமா?. இப்போது கூட சமூக நீதி நிறைந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, முஸ்லிம் […]

You May Like