தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்.23) உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை விடப்படும். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 23) சித்ரா பவுர்ணமி கொண்டாடப்பட உள்ளது. அதனால், அன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெறவுள்ளது.

அதனால் தேனி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணகி கோவில் திருவிழா ஏற்பாடு குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் விடுமுறையில் அரசு கருவூல அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும். மற்ற அலுவலகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

பெங்களூரில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பா?… ஹோட்டலுக்கு வந்த மிரட்டல்!… தீவிர கண்காணிப்பில் போலீசார்!

Tue Apr 23 , 2024
Bengaluru: பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே போன்று கடம்பா என்ற ஹோட்டலுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த மார்ச் 1-ந் தேதி ‘ராமேஸ்வரம் கபே’ ஓட்டலில் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து 2 பயங்கரவாதிகளை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதன் […]

You May Like