மத்திய அரசு துறைகளில் 1,340 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி..!!

job 2

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

கல்வித்தகுதி: இந்தப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக, CIVIL, MECHANICAL, ELECTRICAL ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு நடைபெறும் முறை: இதற்கான தோ்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் https://ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 எனவும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணத்தை 22 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மேற்கோள்ளலாம். என் ஜீனியரிங் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more: அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.. ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!

English Summary

1,340 vacancies in central government departments.. Tomorrow is the last date to apply..!!

Next Post

பயங்கரம்!. சொகுசு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 5 பேர் பலி!. 200க்கும் மேற்பட்டோர் மீட்பு!

Mon Jul 21 , 2025
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 280க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்ட கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பகிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிக்கொண்டு மனாடோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் […]
Indonesia ship fire 11zon

You May Like