ஒரே இடத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பலி.. திருவிழாவில் அரங்கேறிய கொடூர மரணங்கள்.!

தென்கொரியா நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் போது, அதிகமான மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்த நிலையில், கட்டுப்பாடின்றி கூட்டம் அலைமோதியதால் குழந்தைகள் உள்பட 149-க்கும் அதிகமான நபர்கள் பலியான சம்பவம் அங்கே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலருக்கு காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாறுவேடங்களில் உடை அணிந்து வலம் வரும் திருவிழா தென்கொரியாவின் இதோவன் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் கடைசி தேதியில் நடைபெறும். ஹாலோவீன் என்று கூறப்படும் இந்த திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருகை தருவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று பரவலின் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இத்திருவிழா புத்துணர்ச்சியாக துவங்கியுள்ளது. பல்வேறு வகையான பேய் வேடமணிந்து கலந்து கொள்ள குவிந்துள்ளனர். அச்சமயத்தில் அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 130 க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்துள்ளனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு படையினர் தகவலறிந்து வந்த நிலையில் பலியானவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, காயமடைந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தென்கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் அவசரமாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

Baskar

Next Post

பாஜக-வும், NIA-வும் ஜமேஷா முபினுக்கு பயிற்சி கொடுத்தார்களா? பகீர் கிளப்பிய அப்பாவு.!

Sun Oct 30 , 2022
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநரை போல நான் ஒரு பொதுவான பதவியில் இருப்பவன். ஆனால், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. ஆளுநர் ஆர் என் ரவி கார் வெடிப்பு சம்பவம் குறித்த தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார். எந்த அடிப்படையில் இப்படி எல்லாம் அவர் கூறுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. தடயங்கள் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தால் அரசின் […]
வேதிப்பொருட்களை அமேசான், பிளிப்கார்டில் வாங்கிய முபின்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

You May Like