16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


இளைஞர் நலன், விளையாட்டு வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை செயலாளராக இருந்த அபூர்வா வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஷ்குமார் மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டாளர் கிரண் குரலா பேரூராட்சிகள் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.சிரு, சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையாளராக ஆர்.நந்தகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ஜான் லூயிஸ் அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Newsnation_Admin

Next Post

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது!!!

Sat Dec 3 , 2022
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் இன்று(டிசம்பர்-3) பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
1Students

You May Like