லாவோஸ் நாட்டில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் மீட்பு!! – ஜெய்சங்கர்

லாவோசில் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றி வந்த 17 இந்தியர்களை பத்திரமாக மீட்ட இந்திய துாதரகம், அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.

கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்திய இளைஞர்கள் ஆன்லைன் மோசடி உட்பட பல்வேறு சட்ட விரோத வேலைகளில் ஈடுபடுத்தும் போக்கு சில காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லாவோஸ்நாட்டில் பாதுகாப்பற்ற சூழலில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்கள் தற்போது பத்திரமாக இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் மோடியின் உத்தரவாதம் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்போடியாவில் இந்திய இளைஞர்களை கட்டாயப்படுத்தி நிதி மோசடி வேலைகளில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு பலர் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Next Post

#Breaking: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் வீட்டில் சோதனை...!

Sun Apr 7 , 2024
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி ரயிலில் நெல்லை கொண்டு செல்ல முயன்ற ரூ.3.99 கோடி பறிமுதல். புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள் கார்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா எனவும் […]

You May Like