மாதம் 200 கோடி… மகன்களுக்காக எத்தனால் தொடர்பான வியாபாரமா…? மத்திய அமைச்சர் விளக்கம்…!

ethanol 2025

மகன்கள் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால்தான், எத்தனாலை அதிகளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.


2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கியது. பின்னர், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. அதாவது, ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படுகிறது. இதனால் வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் மகன்கள் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால்தான், எத்தனாலை அதிகளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், உயிரி எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பிற்கு எதிராக பரவி வரும் கருத்துகள், தனக்கு எதிராக பணம் கொடுத்து திட்டமிட்டு நடக்கும் பரப்புரை என விமர்சித்தார். “என் மகன்களுக்கு யோசனைகள் மட்டுமே நான் சொல்கிறேன்.

எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு பணப்பற்றாக்குறையும் இல்லை நேர்மையான வழியில் மாதம் 200 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு புத்திக்கூர்மை இருக்கிறது. எத்தனால் காரணமாக கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலையினருமே பயன்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மழைக்கு பாதுகாப்பு.. நுரையீரலுக்கு ஆபத்து..!! புற்றுநோயை உண்டாக்கும் சிமெண்ட் அட்டை..!! மரண பீதியை கிளப்பும் அஸ்பெஸ்டாஸ் நோய்..!!

Tue Sep 16 , 2025
அஸ்பெஸ்டாசிஸ் என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். நீண்ட காலமாக அஸ்பெஸ்டாஸ் இழைகளையும், தூசியையும் சுவாசிப்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இது ஒரு வகையான கனிமம் ஆகும். இது காற்றில் நுட்பமான மற்றும் நீண்ட காலம் நீடித்திருக்கும் இழைகளாக மாறும். இந்த இழைகள் நுரையீரலுக்குள் நுழையும்போது, அவை நுரையீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் தடிப்பையும், வடுவையும் உருவாக்குகின்றன. இது சுவாசிப்பதை மிகவும் கடினமாக்கி, நாளடைவில் உயிருக்கு ஆபத்தான சூழலை கூட உருவாக்கிவிடும். […]
Asbestos Disease 2025

You May Like