2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறிவருவது திமுக தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டணி கட்சியில் இருந்து விலகி வருபவர்களை திமுகவில் சேர்ப்பதில்லை என்ற கொள்கையில் இருந்து விலகி, மதிமுக நிர்வாகிகளை சமீபத்தில் சேர்த்துக் கொண்டது திமுக. இது மதிமுகவுக்கு மட்டுமின்றி மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாத நிலையில், திமுகவின் இந்த நடவடிக்கை மதிமுக தொண்டர்களிடம் கடும் எதிர்ப்புஅலைகளை ஏற்படுத்தியது. பொதுக்குழு உள்ளிட்ட ஆலோசனை கூட்டங்களில் நிர்வாகிகள் இதை காட்டமாகவே வெளிப்படுத்தினர். எனினும், ‘திமுகவுடன் கூட்டணி தொடரும்’ என திட்டவட்டமாக தெரிவித்த வைகோ, தொண்டர்களையும் சமாதானம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், 25 தொகுதிகளில் களப்பணிகளை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதிமுக மாநாடு, மண்டல வாரியான செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இதை தொடர்ந்து, அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த உள்ளனர். இதில், 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Read more: Happy Birthday MS Dhoni| கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள்!.