தூள்..! முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2,053 வகையான சிகிச்சை…! செல்போன் செயலி மூலம் அறியும் வசதி…!

insurance 2025

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர 8 உயர் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.

இதில் 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறலாம். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,500 கோடிக்கான சிகிச்சைகள் மக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், பல தனியார் மருத்துவமனைகளில் அந்த சேவை மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகளை அறிந்துகொள்ளும் வகையில், அந்த விவரங்களை செல்போன் செயலி மூலம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more: 350 ராணிகள், 88 குழந்தைகளுடன் வாழ்ந்த மன்னர்!. கிரிக்கெட் வீரர்; விமானம் வாங்கிய முதல் இந்தியர்!. பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்!.

Vignesh

Next Post

இந்தியாவுக்கு பேரழிவு எச்சரிக்கை!. வெப்பத்தால் 3.28 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் ஏற்படும்!. உலக வங்கி ஷாக் ரிப்போர்ட்!

Wed Jul 23 , 2025
நாட்டில் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் […]
extreme heat risk 11zon

You May Like