திருவாரூரில் ரூ.50 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு. முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஜவுளித் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் SCM Garments குழுமத்தின் துணை நிறுவனமான SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்), உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட ஆடைகள் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தி அலகு அமைத்திட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.



