பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், மே 31, ஜூன் 1 ஆகிய நாட்கள் வார விடுமுறை என்பதால், சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மே 30, 31-ம் தேதிகளில் 1,175 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 48 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்களில் பயணிக்க 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: இது தெரியாம போச்சே…! தொழில் தொடங்க ரூ.40,000 மானியம் வழங்கும் மத்திய அரசின் திட்டம்…!