தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனராக அண்ணாதுரை, பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆணையராக ஜான் லுாயிஸ், சென்னை மாநகராட்சி (கல்வி) இணை ஆணையராக கற்பகம் நியமனம். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில்: ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி ஆணையர் அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த அ.ஜான் லூயிஸ், ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை இணை செயலர் க.கற்பகம், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



