பிரான்ஸ் நாட்டு பகுதியில் வசிக்கும் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் கூறியுள்ளார். அதே நேரத்தில் பாரீஸில் 3 வயது நிரம்பிய குழந்தை, வாஷிங் மெஷினில் கிடப்பதாக என்று தகவல் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து சலவை இயந்திரத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையில் வியாழன் அன்று இரவு வடகிழக்கு பாரிஸில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு , இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கியது என்று பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குழந்தை கண்டெடுக்கப்பட்ட போது, அவளின் உடல்நிலை ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் உயிரிழந்த அந்த சிறுமியின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை இன்னும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
அதே பகுதியில் வசிக்கும் 48 வயதான தந்தை மற்றும் 37 வயதான மனைவி ஆகியோரின் மூன்று வயது குழந்தை சலவை இயந்திரத்தில் அடைக்கப்பட்டு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.