37 நூல்கள் நாட்டுடைமை… யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் படிக்கலாம்…! அமைச்சர் தகவல்

tn govt 20251 1

கடந்த 4 ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்கத்துடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் தமிழ் மின் நூலகம் தொடங்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மின் நூலகத்தில் இதுவரை லட்சக்கணக்கான அரிய வகை நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் மின் பதிப்பாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகளின் ஒரு பகுதியாக நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் மின் நூலகத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதில் இரா.இளங்குமரனார், செ.இராசு, கந்தர்வன், செ.திவான், தஞ்சை பிரகாஷ், நா.மம்மது, நெல்லை கண்ணன், விடுதலை இராசேந்திரன், சோம.லட்சுமணன், இரா.மோகன், கு.கோதண்டபாணி பிள்ளை, அம்சவேணி பெரியண்ணன், மா.சு.சம்பந்தன், கோ.முத்துப்பிள்ளை ஆகிய 14 அறிஞர்களின் படைப்புகள் இதுவரை https://tamildigitallibrary.in/ என்ற தமிழ் மின் நூலகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை பதிவேற்றும் பணிகளும் சீரிய முறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வரும் மார்ச் - ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு...! அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு...!

Mon Sep 22 , 2025
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் விவரங்களை சரிசெய்ய வேண்டுமென தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் – ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் […]
Tn School students 2025

You May Like