கரூர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அமைச்சர் அன்பில் மகேஷ் கரூர் விரைந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பள்ளி குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தேவையான உபகரணம், மருத்துவ பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சை அளிக்க மற்ற மாவட்டங்களில் இருந்தும் மருத்துவரகள் கரூர் விரைந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி சிகி்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுத்தார். கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷை செந்தில் பாலாஜி ஆறுதல் கூறி தேற்றினார். காவல்துறை கொடுத்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என படித்து படித்து சொன்னோமே என கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.



