அதிரடி…! அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்…! இன்று காலை 10 மணி முதல்…! மிஸ் பண்ணிடாதீங்க…

மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின்‌ 2-ம்‌ மற்றும்‌ 4-ம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவானது ரத்து செய்யப்பட மாட்டாது.

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000..! குழப்பங்களை தீர்த்த பின்..! வெளியான முக்கிய தகவல்..!

அரசுத்‌ துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்‌ தேர்வு அனுப்பப்படும்‌. எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்துள்ள நபர்கள்‌ தனியார்துறையில்‌ வேலைக்கு சென்றால்‌ அவர்களது பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில்‌ பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு விற்பனையாளர்‌, மார்க்கெடிங்‌ எக்ஸ்க்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌, கம்ப்யூட்டர்‌ ஆப்பரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌, போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்‌. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும்‌ பள்ளிப்படிப்பு முடித்த ஆண்‌, பெண்‌, மூன்றாம்‌ பாலினத்தவர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ உட்பட அனைத்துவித கல்வித்‌ தகுதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும்‌, விருப்பம்‌ உள்ள நபர்கள்‌ அனைவரும்‌ வருகின்ற இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்துக்‌ கொண்டு பயன்‌ பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Vignesh

Next Post

மல்லிகை அழகுக்கு மட்டும் இல்லை! ஆரோக்கியத்துக்காகவும்தான்!!

Fri Nov 11 , 2022
மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகைப் பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக கருதப்படுகிறது. இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவைதான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகைப்பூக்களின் பலவித நன்மைகளை உள்ளன. பால்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிட வேண்டும். இதே மல்லிகை மொட்டுக்கள் சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மருந்தாக பயன்படுகிறது. மல்லிகைப்பூக்களை […]

You May Like