கார் டயர் வெடித்து கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலே பலி..!!

accident 1 1

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்தவர்களில் 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து மணலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரனையில் காரின் முன்பக்க டயர் வெடித்ததே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்த சாலை மோசமான நிலையில் இருப்பதும், வேகத்தடை இல்லாததும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: முடிவுக்கு வரும் பாமக மோதல்..? அன்புமணி தலைமையிலான போராட்டத்திற்கு ராமதாஸ் வாழ்த்து..!!

English Summary

4 members of the same family die in car tire explosion near Thirukovilur, Kallakurichi district

Next Post

அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி.. விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

Sun Jul 20 , 2025
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, விரைவில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலகினார். இதை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒருமனதாக தேர்வானார். மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா […]
524562 kannamalai 1

You May Like