பெண் தொழில்முனைவோருக்கான உத்யம் சகி தளத்தில் 4,535 பேர் பதிவு…!

Magalir Urimai Thogai 4 2024 06 13959d94ae85e2aed3566ce5d26fd069 1

பெண் தொழில்முனைவோருக்கான உத்யம் சகி தளத்தில் 4,535 பேர் பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு நிதி திட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் ஆதரவு நிறுவனங்கள் குறித்து தகவல்களை வழங்கவும், பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கவும் https://udyamsakhi.com/ என்ற தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் பெண் தொழில்முனைவோர்கள் தங்களுடைய வர்த்தகங்களைத் தொடங்கவும், கட்டமைக்கவும், வளர்ச்சியடைய செய்யவும் மற்றும் தற்சார்பு அடையவும் உதவுகிறது.


இத்தளம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் முத்ரா, பிரதமரின் வேலைவாய்ப்பு உதவித் திட்டம் போன்ற நிதித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் மற்றும் இதர மத்திய அமைச்சகங்களின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யும் கண்காட்சிகள் வர்த்தக காட்சிகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் அளிக்கிறது. இத்தளத்தில் இதுவரை 4,535 மகளிர் பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பிரியாணி கடை ஓனர் மனைவியுடன் உல்லாசம்..!! கணவர் கண்ட காட்சி..!! ரூ.15 லட்சம் பேரம் பேசி..!! ஷாக்கிங் சம்பவம்..!!

Tue Aug 19 , 2025
ஸ்ரீபெரும்புதூரில் பிரியாணி கடை நடத்தி வந்த அரிகிருஷ்ணன் என்பவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேவலூர் குப்பத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி பவானியும் (39) பிரியாணி கடையில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு நெருக்கம் […]
Kanjipuram 2025

You May Like