புதிய வரி விகிதங்களின் கீழ் மார்பிள், கிரானைட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை அறிவித்தார். இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தனிநபர்கள், சாமான்ய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வர்த்தகம் புரிதலை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வரி விகிதங்கள், சுரங்கத்துறைக்கு சாதகமான தாக்கங்களை உருவாக்குவதுடன் வீட்டுவசதி மற்றும் சிறிய அளவிலான தொழில் நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் புதிய வரி விகிதங்களின் கீழ் மார்பிள், கிரானைட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இது வீட்டுவசதி துறைக்கு குறிப்பாக மார்பிள், கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக அமையும்.
மேலும் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் செங்கல் அல்லது கான்கிரீட் பிளாக்குகளுக்கான உற்பத்தி செலவுகள் குறைவதால் கட்டுமான செலவு குறைய வழிவகுக்கிறது. அலுமினியத்தால் தயாரிக்கப்படும் பால் கொள்கலன்கள், மேசைகள், சமையலறை அல்லது தாமிரத்தால் உருவாக்கப்படும் இதர வீட்டுஉபயோகப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது அதற்கான சில்லரை விலை குறைய வழிவகுக்கும்.
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் உள்நாட்டு பன்முக சரக்குப் போக்குவரத்து சேவைகளுக்கான செலவுகள் குறைக்க வழிவகுக்கும் என்று மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது சுரங்கத்துறை மற்றும் கனிம வள உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் குறிப்பாக இருப்புத்தாது உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.