தமிழக அரசு குட் நியூஸ்…! தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு…!

tn Govt subcidy 2025

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.

நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும். அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகர்கள், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உடற்பயிற்சி செய்தபின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?. இத மட்டும் செய்யாதீங்க!. ஏன் தெரியுமா?

Wed Jul 16 , 2025
காலை நடைப்பயிற்சி அல்லது வேறு எந்த உடற்பயிற்சி செய்த பிறகு பெரும்பாலும் தாகம் எடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பலர் யோசிக்காமல் உடனடியாக தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் நடைப்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? உடற்பயிற்சி செய்த பிறகு தண்ணீர் குடிக்க சரியான நேரம் மற்றும் வழி இருக்கிறது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. நாம் நடக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, நமது […]
exercise water 11zon

You May Like