தொடரும் அட்டூழியம்…! எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக 5 தமிழக மீனவர்கள் கைது…!

fisherman arrest

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது. மேலும், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.


கடந்த வாரம் கூட, தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று காலை ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் விசைப்படகில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

நெடுந்தீவு மீன்பிடித்து கொண்டிருந்த போது அத்துமீறிய இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்தது தெரிய வந்துள்ளது. இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அட்டூழியம் செய்வதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். கைதான மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Vignesh

Next Post

இனி சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றலாம்!. ஆண்டுதோறும் 5000 கிலோ கிடைக்கும்!. புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் அமெரிக்க நிறுவனம்!.

Tue Jul 29 , 2025
பாரம்பரிய ஆல்கெமிஸ்ட் முறைபோல, சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க மற்றும் எகிப்திய ரசவாத நூல்களைப் படித்து செயற்கையாகத் தங்கத்தை பலர் உருவாக்க முயன்றனர். இவர்களில் கெபர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் வேதியியல் நுட்பங்களைக் கொண்டு ஈயம் போன்ற உலோகங்களைத் தங்கமாக்க முயன்றார். இப்படிப் பல நூற்றாண்டுகளாகவே ஈயத்தைத் தங்கமாக்கும் […]
us startup gold 11zon

You May Like