கோட்டை விட்ட தொகுதியில் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக.. கட்சியில் இணைந்த 500 பேர்..!! – EPS ஷாக்

23 653796eeb6a38 1

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.


திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் களையெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளளார். தொடந்து கூட்டணி கட்சிகளுடனும் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தின் மூலமாக கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

இதே போல அதிமுகவும் தங்களது கட்சியை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நடந்த இணைப்பு விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதற்கு பதிலடியாக பாமக, அதிமுக பலமாக உள்ள தருமபுரி நல்லம்பள்ளி ஒன்றியத்திலிருந்து புதிதாக 500 பேரை திமுகவில் இணைத்துள்ளனர். கடந்த தேர்ந்தலில் 5 தொகுதிகளையும் கோட்டைவிட்டதால் இம்முறை வெற்றி முனைப்போடு திமுகவினர் வேலை செய்து வருகின்றனர். மாற்று கட்சியினரை இழுக்கும் முயற்சியில் திமுகவும், அதிமுகவும் இறங்கியதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.

Read more: 2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள்…!

English Summary

500 new people have joined the DMK from Dharmapuri Nallampally union, where PMK and AIADMK are strong.

Next Post

மனைவியை கழட்டி விட்டு இரண்டாம் திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்.. 6 மாதம் கர்ப்பம் வேற..!! - வைரல் போட்டோஸ்

Sun Jul 27 , 2025
Madhampatti Rangaraj, who got married for the second time..
madhampatty rangaraj 2025 07 27 08 51 03 1

You May Like