54,483 அங்கன்வாடி மையங்களும் தொடர்ந்து நடத்தப்படும்…! அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு…!

Geetha Jeevan 2025

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


திமுக அரசு 2021-ல் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு, தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இவையாவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைக்கு ஏற்ப கூடுதலாக மையங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட 54,483 அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை படி, தேவையான இடத்துக்கு அங்கன்வாடி மையங்களை இடமாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் புதிய பகுதிகளில் புதிய மையங்களை தொடங்கவும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அதேபோல் குறைவான பயனாளிகளை கொண்டு அருகருகே இயங்கி வரும் இரு அங்கன்வாடி மையங்களை இணைக்கவும், தூரத்தில் செயல்படும் மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்துக்கு அருகேயும் மலைப்பகுதிகளிலும் புதிதாக குறு மையங்களை தொடங்க கடந்த 6 மாதங்களாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட இவையாவும் தமிழக அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளன. நடைமுறைப்படுத்தினாலும் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் 54,483 அங்கன்வாடி மையங்களும் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

CM ஸ்டாலின் அதிரடி...! 10 துறைகளின் செயல்பாடுகள் குறித்து 4 மணி நேரம் தொடர் ஆய்வு...!

Tue Jul 8 , 2025
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து நான்கு மணி நேரம் தொடர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்கள் துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் […]
mks Stalin 2025

You May Like