எச்சரிக்கை..! 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று… 11 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் அலர்ட்…!

rain 1

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும். டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். வரும் 25-ம் தேதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 25 முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 27-ம்தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருகை...! தமிழகம் முழுவதும் இன்று முதல் 26-ம் தேதி வரை SIR கள ஆய்வு.‌‌..!

Mon Nov 24 , 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறித்து இன்று முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர […]
election 2025

You May Like