டீப்ஃபேக் வீடியோக்களை உண்மையென நம்பும் 57% பேர்..!! 31% பேர் பணத்தை இழந்துள்ளனர்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் AI எனும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல நிறுவனங்கள் ஊழியர்களின் வேலைகளை இலகுவாக செய்து முடிக்கின்றன. இதில், எத்தனை நல்லது உள்ளதோ அதே அளவு தீமைகளும் உள்ளது. AI தொழில்நுட்பத்தின் மூலம் டீப்ஃபேக் வீடியோக்கள் அதிகளவில் சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன. இதில் எது உண்மை, எது பொய் வீடியோ என்பதை சாமானியர்களால் கண்டறிவது மிகுந்த சிரமமே. இந்த வீடியோக்களால் பல நடிகைகள், நடிகர்கள், மற்ற பிரபலங்கள் கூட பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து McAfee எனும் தொழில் நுட்பத்துறை அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்து அதனை வெளியிட்டுள்ளது. அதன்படி, 75 சதவீத இந்தியர்கள் டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 38 சதவீத மக்கள் டீப்ஃபேக் வீடியோவை எதிர்கொண்டு வருகின்றனர். அதில், 18 சதவீதம் பேர் பாதிப்படைந்துள்ளனர். டீப்ஃபேக் வீடியோ பார்த்தவர்களில் 57% பேர் பார்த்தது உண்மையானது என்றே நம்புகின்றனர். டீப்ஃபேக் வீடியோவால் பாதிப்படைந்ததில் 31% பேர் தங்கள் பணத்தை இழந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டீப்பேக் வீடியோவால் பாதிப்படைந்ததில் 40% பேர் தங்களின் குரல் மாற்றம் செய்த வீடியோவை பார்த்துள்ளனர். 39% பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர் என McAfee அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. டீப்ஃபேக் வீடியோ மோசடியில் ஈடுபடும் நபர்களில் 55% பேர் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட இதனை செய்கின்றனர். மோசடியில் ஈடுபடுவதில், 52% பேர் போலியாக ஆபாச படங்களை தயார் செய்கின்றனர். 49% பேர் மோசடி செய்வதற்காக டீப்ஃபேக் வீடியோக்களை பயன்படுத்துகின்றனர். மோசடியில் ஈடுபடும் நபர்களில் 44% பேர் ஆள்மாறாட்டம் செய்வதற்காகவும், 37% பேர் போலி செய்திகளை தயார் செய்யவும், 31% பேர் தேர்தலில் வாக்களிக்கவும் இதனை பயன்படுத்தியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை McAfee அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More : அடிக்கடி ஜீன்ஸ் பேண்ட் போடுறீங்களா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்..!! இனியும் அப்படி பண்ணாதீங்க..!!

Chella

Next Post

குடும்பத்துடன் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்கிறாரா முதல்வர் முக.ஸ்டாலின்..!! தீயாய் பரவும் செய்தியின் உண்மை நிலை என்ன..?

Sat Apr 27 , 2024
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி […]

You May Like