பெரும் சோகம்…! ஆட்டோ மீது லாரி மோதியதில் பயணிகள் 6 பேர் பலி…!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூடில், வேகமாக வந்த டிப்பர் லாரி ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பலர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 6 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலின்படி, நகரின் கோட்வாலி பகுதியின் அமன்பூர் பகுதி அருகே வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஆட்டோ மீது மோதியது. விபத்து நடந்தபோது ஆட்டோவில் 8 பயணிகள் இருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி கூறுகையில், 8 பேர் படு காயங்களுடன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தார். பலி எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் இதுவரை மூன்று பேரை அடையாளம் கண்டுள்ளனர்.

Vignesh

Next Post

Tn Govt: மாணவர் சேர்க்கை தொடங்கிய இரண்டே நாளில் 3 லட்சம் பேர் அட்மிஷன்...!

Wed Apr 3 , 2024
ஏப்ரல் 30-ம் தேதி வரை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து, அரசு ஆசிரியர்கள் அனைவரையும் கொண்டு மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள, அனைத்து […]

You May Like