வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது..!!

பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, இன்று முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு பணியும் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான், பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றும் வாக்காளர் விவரங்களுடன் தற்போது வாக்காளர்களின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்து பிழை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதேசமயம் வாக்காளர் அட்டையில் புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Read More : தகாத உறவு..!! பெண்களை கல்லால் அடித்துக் கொல்லும் நடைமுறை மீண்டும் அமல்..!! உலக நாடுகள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

Kamalhaasan | ’என் படங்களில் இதனால் தான் சாதி பெயர் வருகிறது’..!! விளக்கம் கொடுத்த கமல்ஹாசன்..!!

Thu Apr 4 , 2024
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதாரத்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மக்களுடன் கலக்காத அரசாக மத்தியில் இருக்கும் பாஜக அரசு உள்ளது. அனைத்து சித்தாந்தங்களும் மக்களுக்காக தான். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று வெளிநாட்டு அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். நாங்கள் வீரர்கள், அதனால் களம் கண்டுள்ளோம். நாங்கள் இந்த தேர்தலில் தியாகம் செய்யாமல் வியூகம் செய்துள்ளோம். தன் வாழ்வை சமூகத்துக்கு கொடுத்து, குரலற்றவர்களின் குரலாக, பெருஞ்சிறுத்தையாக […]

You May Like