Flash: ஜனநாயகன் படம் லீக் ஆன விவகாரம்.. 6 பேர் கைது..!

jananayagan

விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான விவகாரத்தில் 6 பேரை தமிழக சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.


விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம்.. எனினும் இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வராததால் மீண்டும் சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டிக்கே படத்தை படக்குழு அனுப்பியது.

ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க சென்சார் கமிட்டி பரிந்துரை செய்ததது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது.. இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் முழு காட்சியும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழு மற்றும் தளபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜனநாயகன் படத்தின் லீக்கான காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ அல்லது பகிர்ந்தாலோ கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தின் காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்களில் பகிர்ந்தாலோ, சேமித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் போலீசார் தரப்பில் எச்சரித்தனர். இந்த நிலையில்,. விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான விவகாரத்தில் 6 பேரை தமிழக சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Read more: “கட்டதுரை போல தான் ஸ்டாலின்” வடிவேலு காமெடியை சொல்லி அட்டாக் செய்த இபிஎஸ்.. சூடு பிடிக்கும் பிரச்சாரம்..!

English Summary

6 people arrested in connection with Vijay’s film jananayagan being leaked online

Next Post

உலகையே ஆச்சரியப்படுத்தும் சனீஸ்வரர் கோயில்.. சனிப்பெயர்ச்சியில் கண்டிப்பாக செல்ல வேண்டிய தலம்..! தமிழ்நாட்டில் எங்க இருக்கு தெரியுமா..?

Mon Apr 13 , 2026
The Saneeswarar Temple that amazes the world.. A must-visit place during the Shani Peyarchi..! Do you know where it is in Tamil Nadu..?
temple 1

You May Like