60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…!

Cyclone 2025 1

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது.


இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!. கிரெம்ளின் உறுதிப்படுத்தியது!.

Sat Aug 30 , 2025
வரி போர்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதிப்படுத்தியது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து […]
Putin visit India 11zon

You May Like