Alert: 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்;;தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 12-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும்.

தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more: இன்று தேசிய மருத்துவர் தினம்!. முதலமைச்சராக இருந்தபோதும் மருத்துவர் பணி; Dr. பி.சி. ராயின் மகத்தான சேவை!

Vignesh

Next Post

டெக்சாஸ் விரையும் அதிபர் டிரம்ப்! வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 78ஆக உயர்வு; 40க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை!.

Mon Jul 7 , 2025
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடவுள்ளார். அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு […]
texas floods Trump to visit 11zon

You May Like