அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, அலாஸ்கா தீபகற்பத்திற்கு தெற்கே, பசிபிக் பெருங்கடலில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை வெளியேறினர். இந்த நிலநடுக்கம் கோடியாக் தீவு, அலாஸ்கா தீபகற்பம் மற்றும் கிழக்கு அலூடியன் தீவுகளின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ச
இதனைத் தொடர்ந்து, தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் (NTWC) கடலோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக உள்நாட்டுப் பகுதிகளுக்கு, அதாவது கடலுக்கு வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கோ அல்லது உயரமான நிலத்துக்கோ செல்லுங்கள்” என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் (NTWC) அறிவுறுத்தியுள்ளது.
அலாஸ்கா மாநிலம், உலகின் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான பசிபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்துள்ளது. அலாஸ்கா கடந்த காலங்களில் பல கடுமையான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக: 1964ம் ஆண்டு மார்ச் மாதம், 9.2 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியது. இது வட அமெரிக்காவில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம். அப்போது ஆங்கரேஜ் நகரம் பேரழிவுக்கு ஆளானது. அதனுடன் அலாஸ்கா வளைகுடா, அமெரிக்க மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் ஆகிய பகுதிகளிலும் பெரும் சுனாமி ஏற்பட்டது.
Read more: நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு!. மும்பையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!. பயணிகள் பீதி!