தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
அரசு சிறப்பு செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையில் பணியாற்றிய சதிஷ் சந்திரா சவான், அரசு செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசு கூடுதல் செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய பதவியில் இருந்த கே.கோபாலகிருஷ்ணன் அரசு கூடுதல் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு (சதிஷ் சந்திரா சவானுக்கு பதிலாக) மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த பா.மகேந்தர் லால் அரசு துணை செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுள்ளார். எஸ்.பிரியங்கா தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக (பா.மகேந்தர் லாலுக்கு பதிலாக) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு கூடுதல் செயலாளர், உள், மனிதவள மற்றும் ஆயுதப்படைத் துறையில் இருந்த பி.ஸ்ரீ வெங்கட பிரியா, செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய பணிக்கு (கே.கோபாலகிருஷ்ணனுக்கு பதிலாக) மாற்றம் செய்யபப்ட்டுள்ளார். வரூண்யா அபி கூடுதல் இயக்குநர், சமூக நல இயக்குநராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்வேதா சுமன் செயல் அலுவலர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு (TIDCO) மாற்றப்பட்டுள்ளார்.