குட் நியூஸ்…! ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்திற்கு 8 அறிவிப்பு… என்ன தெரியுமா…?

ration cad

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் சார்பில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.


ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்:

1. அசல் ரேஷன் கார்டு தொலைந்தால், தற்போது ஆன்லைனில் நகல் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அந்த நகல் அட்டைகள் தபால் வழியாக நேரடியாக வீடுகளுக்கு அனுப்பப்படும். 2. முதியோர், மாற்றுத் திறனாளிகள், உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும் நபர்கள் நியாய விலைக் கடைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், ஒருவரை பிரதிநிதியாக நியமித்து பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான ஆங்கீகார சான்றிதழ் பெற வேண்டும்.

3. பயனாளிகள் பெறும் பொருட்களின் எடை சரியாக இருக்க, விற்பனை இயந்திரத்தில் எடை தராசு இணைக்கப்பட்டுள்ளது. தற்போது 1,980 நியாயவிலைக் கடைகளில் இது நடைமுறையில் உள்ளது. 4.கைவிரல் ரேகை சரியாக வேலை செய்யாத பயனாளிகள், Iris (கண் கருவிழி) ஸ்கேன் மூலம் பொருட்களை பெறலாம். இந்த முறை தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. 5. ரேஷன் கார்டுகளில் க்யூ.ஆர். கோடு (QR Code) அச்சிடப்பட்டு வருகிறது. விற்பனை இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பொருட்கள் பெற முடியும்.

6. ஊட்டச்சத்தைக் அதிகரிக்க அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. 7. தமிழ்நாடு முழுவதும் 99 விழுக்காடு பயனாளிகள், கைவிரல் பதிவு வழியாகவே ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர். 8. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சேவைகள் விரைவாக வழங்கப்படும்.

Vignesh

Next Post

இப்ப வந்தவனுக்கு மாவட்ட செயலாளர் பதவி; 10 வருசமா பாடுபட்ட எனக்கு என்ன மரியாதை?. விஜய் படத்தை தூக்கி வீசிய நிர்வாகிகள்!. பாதியிலேயே ஓட்டம்பிடித்த புஸ்ஸி ஆனந்த்!

Fri Jul 25 , 2025
செஞ்சியில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளரை கண்டித்து கட்சி நிர்வாகிகள் திடீரென விஜய் படத்தை தூக்கி எறிந்து காலால் மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுச்செயலாளர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாட்டை […]
senji tvk 11zon

You May Like