சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உள்ளிட்ட 8 தொழில் குறியீடு 12.1% அதிகரிப்பு…!

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (அடிப்படை ஆண்டு 2011-12), 2024 பிப்ரவரி மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை மிக உயர்ந்த வளர்ச்சியை 11.6% எனக் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 190.1 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் நிலக்கரி தொழில்துறையின் குறியீடு 212.1 புள்ளிகளை எட்டியுள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடு 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 12.1% அதிகரித்துள்ளது.

சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை ஐசிஐ அளவிடுகிறது. எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2024, பிப்ரவரி மாதத்தில் 6.7% அதிகரிப்பை கொண்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் நிலையான இரட்டை இலக்க வளர்ச்சியையும், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் எட்டு முக்கிய தொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட கணிசமாக அதிக வளர்ச்சியையும் வெளிப்படுத்தி நிலக்கரித் தொழில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பின்னால் உள்ள உந்து சக்தி 2024, பிப்ரவரி மாதத்தில் நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க எழுச்சிக்கு காரணமாக இருக்கலாம். இந்த மாதத்தில் உற்பத்தி 96.60 மில்லியன் டன்களை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 11.83% அதிகரித்துள்ளது.

Vignesh

Next Post

Savings | குறைந்த முதலீடு அதிக லாபம்..!! தபால் துறையின் சூப்பர் திட்டம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Apr 2 , 2024
இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் மாதம் தோறும் வருமானத்தை பெற விரும்பும் நபர்கள் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பணத்தை செலுத்தலாம். அதேபோல ஒவ்வொரு மாதமும் வட்டியானது உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படாது. […]

You May Like