99% மாரடைப்புகள் இந்த 4 ஆபத்து காரணிகளுடன் தொடர்புடையவை – புதிய ஆய்வில் தகவல்..!

heart attack 1

ஒரு பெரிய சர்வதேச ஆய்வு, உலகம் முழுவதும் மாரடைப்பு Heart Attack), ஸ்ட்ரோக் மற்றும் இதய தொடர்பான பெரும்பாலான கடுமையான பிரச்சனைகளுக்கு 4 பொதுவான காரணிகள் தான் 99% வரை காரணம் என்று கண்டறிந்துள்ளது. அவை உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure), அதிக கொழுப்பு / கொலஸ்ட்ரால் (High Cholesterol) அதிக ரத்த சர்க்கரை / நீரிழிவு (High Blood Sugar / Diabetes) புகையிலை / புகைப்பழக்கம் (Tobacco Use) ஆகியவை தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


ஆய்வு விவரம்

அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளை சேர்ந்த 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பெரியவர்களின் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வு 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு கீழ் உள்ள இளம் பெண்களிடமே கூட, 95% க்கும் அதிகமான இதய சம்பவங்கள் இந்த 4 காரணிகளில் ஒன்றோ அதற்கு மேற்பட்டவையோ காரணமாக இருந்தது.

மிகப்பெரிய காரணம் – உயர் ரத்த அழுத்தம்

மாரடைப்பு, ஸ்ட்ரோக் அல்லது இதய செயலிழப்பு ஏற்பட்டவர்களில் 93% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் பிலிப் கிரீன்லாண்ட் பேசிய போது “இந்த 4 அபாயக் காரணிகளில் ஒன்றாவது இல்லாமல் இதய நோய் ஏற்படுவது அரிது. ஆகவே, சிகிச்சை செய்ய முடியாத காரணிகளை தேடுவதற்குப் பதிலாக, கட்டுப்படுத்தக்கூடிய இந்த அபாயங்களை சரியாகக் கையாள வேண்டும்.” என்று கூறினார்..

முன்கூட்டிய பரிசோதனை அவசியம்

இளம் வயதிலிருந்தே ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம் இவைகளை கட்டுப்படுத்தினால், எதிர்காலத்தில் இதய நோய்களை பெருமளவு தடுக்க முடியும்.

ட்யூக் பல்கலைக்கழக இதய நிபுணர் டாக்டர் நேஹா பகிடிபட்டி பேசிய போது “ நாம் இதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும். இளம் வயதிலேயே அபாயங்களை கட்டுப்படுத்தினால் உயிருக்கு ஆபத்தான நோய்களை தவிர்க்க முடியும்.” என்று தெரிவித்தார்.. இந்த ஆய்வு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி இதழ் (Journal of the American College of Cardiology) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Read More : சிக்கனின் இந்த பகுதி மிகவும் ஆரோக்கியமானது..! உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்..! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..!

RUPA

Next Post

'F*ck You' : நடுவிரலை காட்டி, ஃபோர்டு ஊழியரை கோபமாக திட்டிய டிரம்ப்..! ஏன் தெரியுமா? வைரல் வீடியோ..!

Wed Jan 14 , 2026
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை ஃபோர்ட் கார் தொழிற்சாலையை பார்வையிட்டபோது, அங்கிருந்த ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, டிரம்ப் அந்த நபரிடம் அநாகரிக சைகை (middle finger) காட்டியதும், கோபமாக கத்தி திட்டியதும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை TMZ வெளியிட்டது. வெளியான உடனேயே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் என்ன இருக்கிறது? வீடியோவில், டிரம்ப் முதலில் […]
trump

You May Like