fbpx

சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர்..! சற்றுமுன் நடந்த வாக்கெடுப்பில் அதிரடி தேர்வு..!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

Rahul Narwekar - Wikipedia
ராகுல் நர்வேகர்

அதேசமயம், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், சற்று முன்னர் அப்பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேகரும், மகாவிகா அகாதி கூட்டணி சார்பில் சிவசேனாவின் ராஜன் சால்வி ஆகியோரும் போட்டியிட்ட நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்படி, முதலாவதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதனிடையே, மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு பெரும்பான்மையை பொருத்தமட்டில் 145 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவையாக உள்ள நிலையில், ஏற்கனவே பாஜகவுக்கு 161 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

இதனால், பாஜக சார்பில் போட்டியிடும் ராகுல் நர்வேகரும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒரு ஆண்டுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் ராகுல் நர்வேகர் வெற்றி பெற்று புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராகுல் நர்வேகருக்கு 164 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அண்ணனுக்கு பதில் தம்பியை கடத்தி தாக்குதல் நடத்திய கும்பல்..! ரூ.40 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்..!

Sun Jul 3 , 2022
அண்ணனுக்கு பதில் தம்பியை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கலீலர் ரஹ்மான். இவரது மகன்கள் நூருல்ஹக், ஷேக் மீரான். இவர்களில் ஷேக் மீரான் சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஷேக் மீரான் மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது […]
ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

You May Like