அண்ணனுக்கு பதில் தம்பியை கடத்தி தாக்குதல் நடத்திய கும்பல்..! ரூ.40 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்..!

அண்ணனுக்கு பதில் தம்பியை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கலீலர் ரஹ்மான். இவரது மகன்கள் நூருல்ஹக், ஷேக் மீரான். இவர்களில் ஷேக் மீரான் சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஷேக் மீரான் மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஷேக் மீரானை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். பின்னர் ரூ.40 லட்சம் கேட்டு ஷேக்மீரானை தாக்கியுள்ளனர். மேலும் பணத்தை கொடுக்கும்படி அவரது அண்ணன் நூருல்ஹக் மற்றும் தந்தை கலீலர் மீரானுக்கு போன் செய்து கூறும்படி மிரட்டினர். இதுபற்றி ஷேக்மீரான் தனது தந்தையிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலீலர் ரஹ்மான் தனது மகன் கடத்தப்பட்டது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

திருமண ஆசை காட்டி மைனர் பெண் கடத்தல்- போக்சோவில் தொழிலாளி கைது | tamil news  16 year old woman kidnap case worker arrested

இதுபற்றி எஸ்பிளனேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கடத்தல் கும்பல் மண்ணடி, முத்து மாரி செட்டித் தெருவில் உள்ள லாட்ஜில் ஷேக்மீரானை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாட்ஜில் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஷேக்மீரானை மீட்டனர். மேலும் அங்கிருந்த மண்ணடியைச் சேர்ந்த முகமது ராவுத்தர், முகமது ரிபாயிதீன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த விஜயன், லட்சுமணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் ரூ.40 லட்சம் கடன் தகராறில் இந்த கடத்தல் நடந்து இருப்பது தெரியவந்தது. கடத்தப்பட்ட ஷேக் மீரானின் அண்ணன் நூருல் ஹக்கும், கடத்தல் கும்பலில் இருந்த ஒருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று வந்துள்ளனர். இதில் ரூ.40 லட்சம் பணத்தை நூருல்ஹக் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், அவர் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த தகராறில் நூருல் ஹக்குக்கு பதிலாக அவரது தம்பி ஷேக்மீரானை கடத்தி பணம் கேட்டு மிரட்டி இருப்பது தெரியவந்தது. கடத்தல் கும்பல் அறையில் 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த கடத்தல் தொடர்பாக அப்பாஸ், மதன்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! எங்கெங்கு தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Sun Jul 3 , 2022
கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் […]

You May Like