fbpx

’தற்காலிக ஆசிரியர் நியமனத்தை தடை செய்க’..! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்றும் தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள போதிலும், அது தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பை போக்கவில்லை. தற்காலிகம் என்பதை தடை செய்துவிட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் தற்காலிகமாக நியமிப்பதை பெற்றோர்கள் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக கண்டித்திருக்கின்றனர்.

’தற்காலிக ஆசிரியர் நியமனத்தை தடை செய்க’..! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

ஆனால், தமிழக அரசோ இது தற்காலிக ஏற்பாடுதான், அடுத்த சில மாதங்களில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள் என்று விளக்கம் அளித்திருக்கிறது. ஆசிரியர்கள் நியமனத்தில் நிலவும் அனைத்து குழப்பங்களுக்கும் தமிழக அரசு கடைபிடித்து வரும் ஒரே ஒரு தவறான கொள்கைதான் காரணம் ஆகும். அந்தத் தவறை சரி செய்துவிட்டால், அடுத்த ஒரு வாரத்திற்குள் காலியாக உள்ள அனைத்து இடைநிலை-பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களை எந்த சர்ச்சையுமின்றி நியமிக்க முடியும். அதற்கு அரசு மனம் வைக்க வேண்டும் என்பது தான் ஒரே தேவை.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் திறமையை நிரூபித்துவிட்டனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு தேவையில்லை என்பதுதான் பாமகவின் நிலைப்பாடும். பிற மாநிலங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார். போட்டித் தேர்வின் அடிப்படையில் இல்லை. இதுவரை நடத்தப்படாத போட்டித் தேர்வுகளை இனியும் நடத்தாமல் இருப்பதே சமூக நீதி.
ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசிடம் இருக்கும் நிலையில், அதற்கேற்ற எண்ணிக்கையிலான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்வு செய்து கல்வியாண்டின் தொடக்கத்தில் நியமிப்பதை தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நாகர்கோயில் காசி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிசிஐடி ரகசிய விசாரணை...!

Sun Jul 3 , 2022
நாகர்கோவில் காசி மீதுள்ள மேலும் இரண்டு வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி.போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். காசியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடந்துவருகிறது. நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் சுஜி என்ற காசி (27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் கடந்த 2020-ம் வருடம் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு […]

You May Like